ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் ஹோமியோபதி வைத்தியசாலை இணைந்து நடாத்தும் இலவச மருத்துவ முகாம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளைக் காரியாலயத்தில் (தக்கியா பள்ளி) எதிர்வரும் 2024/08/31 ம் திகதி சனிக்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12 மணிவரை வைத்தியர் ஏ.எச்.எம் இஸ்ஸத் பர்வின் தலைமையில் இடம்பெற உள்ளது.
1. நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம்
2. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தாமதமாதல்
3. அன்றாடம் ஏற்படும் காய்ச்சல், வயிற்று வலி
4. உடல் பருமன்
5. முடி உதிர்தல்
6. பேண்களை அழித்தல்
7. பாடசாலை மாணவர்களின் கிரகிக்கும் ஆற்றல்
8. பித்தப்பை, சிறுநீரகக் கல் அகற்றல்
9. வயிறு சம்பந்தமான நோய்கள்
10. ஆண் பெண் மலட்டுத்தன்மை
போன்ற நோய்களுக்கான தீர்வுகள் வழங்கப்படுவதுடன் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் சமூக சேவை உபக்குழு உறுப்பினர் அஷ்ஷேக் ஸனூஸ் (அஷ்ரபீ) தெரிவித்துள்ளார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ.எம் சனூன்)