கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி
கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி புதன்கிழமை (28) பாலர் பாடசாலையின் அதிபர் அரூஸியா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பாலர் பாடசாலைகளுக்கான பொறுப்பதிகாரி எம்.நிப்ராஸ் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அந்நூர இளைஞர் கழகத்தின் தலைவர் எம் நியாஸ்தீன் , முன்னாள் அந்நூர் இளைஞர் கழகத்தின் தலைவரும் எம்.எப்.எம் றில்பாஸ், என பலரும் கலந்து சிறப்பித்தனர்
கற்பிட்டி அந்நூர் இளைஞர் கழகத்தினால் கடந்த 36 வருடங்களாக சிறப்பாக நடாத்தப்பட்டு வரும் அந்நூர் பாலர் பாடசாலை சிறார்களின் ஆளுமை விருத்தியை அதிகரிக்கும் வகையில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒரு அங்கமாக இடம்பெறும் இச் சிறுவர் கண்காட்சி 28 வது வருடமாகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அந்நூர் இளைஞர் கழகத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.எப்.எம் றில்பாஸ் அந்நூர் பாலர் பாடசாலையின் அபிவிருத்தியை மையப்படுத்திய வேலைத்திட்டங்கள் சிலவற்றை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததுடன் அந்நூர் இளைஞர் கழகம் மற்றும் பாலர் பாடசாலை என்பவற்றை மேலும் அபிவிருத்தியை நோக்கி சிறந்த சேவைகளை கற்பிட்டியில் வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ.எம் சனூன்)