உள்நாடு

விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார்; தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆசிரியை ஹய்மன் சுலைமான்

இன, மத, சாதிபேதமின்றி நாட்டின் எதிர்காலத்திற்காக தூரநோக்குடைய மூன்றாவது மில்லேனியத்தின் சவால்களுக்கான தீர்வினைகொண்டுள்ள சகோரத்துவத்துடன் அனைவரையும் சமமாக மதிக்கின்ற மனிதத்துவம் நிறைந்த ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரே கட்சியாக அமைவது தேசிய மக்கள் சக்தியாகும். நாட்டை வெற்றியீட்டச் செய்விக்க அர்ப்பணிக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் ஒன்று சேரவேண்டிய இடம் இந்த தேசிய மக்கள் சக்தியாகும்.இதுவரையும் வேறெந்த கட்சியின் மேடையிலும் ஏறியிராத எனக்கு மறுமலர்ச்சிக்காக தமிழில் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமையை நான் பெற்ற பேறாக கருதுகிறேன். எங்களுடைய தமிழ் பேசும் சகோதர சகோதரிகளை தட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பினை ஈடேற்ற இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன்.

நான் உரையாற்றும்போது அதனை இனவாதம் அல்லது மதவாதம் என நினைத்துவிட வேண்டாம். எம்மை பாதுகாக்கவென எம்மால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் எங்களை ஏமாற்றுவதால் நாங்கள் உங்களிடம் ஏமாறாப்போவதில்லை என்ற செய்தியை இந்த மேடையிலிருந்து கொடுக்க நான் விரும்புகிறேன். ஒரு பிரபலப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாகிய நான் இந்த இடத்தில் இந்த நேரத்தில் உங்கள் முன் ஏன் தமிழில் உரையாற்ற வந்திருக்கிறேன் என்றால் 76 வருடங்களாக இந்த நாட்டையும் எம்மையும் ஏமாற்றி இந்த நாட்டை பிளவுப்படுத்திருக்கும் இந்த குப்பை அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதே அதன் நோக்கமாகும்.

இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஆனால் நிறம் மாத்திரம் வித்தியாசமானவை. என்னுடைய இரத்தத்திலும் பச்சை நிறம் தான் ஊறியிருந்தது. பச்சை நிறத்திற்காக புள்ளடியிடுவதே எனது வேலையாக இருந்தது. யானை அல்லது டெலிபோன் என்றால் புள்ளடியிடுவேன். முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கலாம் ஏனைய அரசியல்வாதிகளாக இருக்கலாம். தோ்தல் காலத்தில் மாத்திரம் எம்மீது கரிசனைக காட்டுவார்கள். ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறதாம். அதுபோல எமது துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் அவர்களுக்கு ஞாபகம் வந்துவிடும். ஓடோடி வருவார்கள். எங்களுடைய கஷ்டங்களை போக்குவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் இதுவரை எந்த பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

ரவூப் ஹக்கீம் அவர்களே இந்த பேச்சு உங்களுக்காகத்தான். நீங்கள் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறீர்கள். தேசிய மக்கள் சக்தியின் உண்மைத்தன்மை மக்களை சென்றடையாமல் எவ்வாறு பிரபல மீடியாக்கள் தடுக்கின்றனவோ அதைப்போலத்தான் இன்டனெஷனல் மீடியாக்களும் முஸ்லிம்களின் உண்மை நிலையை மக்களுக்கு சென்றடைவதை தடுத்துக் கொண்டிருக்கின்றன. அது தான் உண்மை. நீங்கள் அதை செய்வதை தவறவிட்டு அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்த பின்னர் அந்த விடயத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு முஸ்லிம்களின் கவனத்தை திசைதிருப்புகிறீர்கள். கடந்த 30 வருடங்களாக தோல்வியடைகின்ற கட்சிகளின்பால் முஸ்லிம்களை வழிநடத்தி முஸ்லிம் மக்களை கேவலமான நிலையில் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு திடீரென என்ன கவலை வந்திருக்கிறது.

முஸ்லிம் பெண்களுக்காக என்ன செய்தீர்கள்? முஸ்லிம் பெண் மாணவிகளுக்கான காற்சட்டை துணிகளை இதுவரை பெற்றுக்கொடுத்தீர்களா? விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார். நீங்கள் உண்மையை மறைத்து எங்களை ஏமாற்றி வாக்குகளை பறித்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்றுடன் உங்களுடைய ஏமாற்று வித்தையை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் மும்மொழித் திறமை இருப்பது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல. முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கே. இதுவரை ஒன்றுமே செய்யாமல் இருந்துகொண்டு அநுர திசாநாயக்கவின் குறைகளை சொல்லிக் கொண்டு சஜித்தை வெல்லவைக்கப் போகிறீர்களா? ஒன்றுமே விளங்காத புத்தித்தெளிவில்லாத ஒருவரை இந்த நாட்டின் தலைவனாக்கப் போகிறீர்களா? அதற்கு எந்த மதம் இடம் தந்தது என்று சிந்தியுங்கள்.

எதிர்வரும் பாராளுமன்ற தோ்தலில் குளிர்காய்வதற்காகவே நீங்கள் இதனை செய்து வருகிறீர்கள். இனவாதத்தைத் தூண்டி சகோதரத்துவத்தை குழிதோண்டி புதைக்கின்ற மோசமான வேலையில் ஈடுபடவேண்டாம். இந்த கிழட்டு முஸ்லிம் தலைமைகளைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம். புதிய சிந்தனைகொண்ட இளைய தலைமைகளை தேடியெடுங்கள். உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் என்ற பெருமையோடு இந்த நாட்டில் நிம்மதியாக கௌரவத்துடன் சரிசமமாக வாழவேண்டுமா? அப்படியானால் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்வித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை தோ்தெடுங்கள். அது தான் உங்களுடைய வெற்றிக்கும் விடுதலைக்குமான ஒரே வழி என்று கூறி விடைபெறுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *