உள்நாடு

பாணந்துறை ஹேனமுல்லையின் சமூகத்துக்கான முதலாவது பெண் வைத்தியராக பட்டம் பெற்றுள்ள சயிமா பானு..!

பாணந்துறை ஹேனமுல்லையைச் சேர்ந்த எம்.எச். சயிமா பானு ஹேனமுல்லையின் சமூகத்துக்கான முதலாவது பெண் வைத்தியராக பட்டம் பெற்றுள்ளார்.
     பேராதனை பல்கலைக்கழகத்தின் எண்பத்தைந்தாவது பொது பட்டமளிப்பு விழா-2023 பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் இறுதிப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்த டாக்டர் சயிமா பானு உப வேந்தரிடமிருந்து தனது பட்டமளிபுக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
     பாணந்துறை மண்ணில் உதித்த இவர் ஹேனமுல்லை ஜீலான் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும்  இக்கல்லூரியில் கல்விகற்ற முதல் பெண் வைத்தியர் என்ற பெருமைக்குரியவருமாவார். ஹேனமுல்லையைச் சேர்ந்த முஹம்மது ஹாரிஸ் மற்றும் ஆசிரியை எம்.எம்.எஸ்.சரீனா தம்பதிகளின் புதல்வியுமாவார்.
    பல்கலைக்கழக வைத்தியபீட இறுதிப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்த இவர்  தேசிய  வைத்தியமனை சேவைக்கு தெரிவாகி கொழும்பு டீ. சொயிசா மகளிர் வைத்தியசாலையில் கடமையாற்றுகிறார்.சமூகத்துக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும் என்ற தனது உயர்ந்த நீக்கத்தை  அடைவதற்காக விடாமுயற்சியுடன் கல்வி ஞானத்தைப் பெற்று தனது இலக்கையடைந்த   இவர் வைத்திய துறையில் மேலும் உயர்வுகளைப்பெற  பெற்றோர்,  ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தியுள்ளனர்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *