போதைப் பொருள் விழிப்பூட்டல் திட்டம் அங்குரார்ப்பணம்..!
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,மாவனல்லை பிரதேச பிரமுகர்களுடனான சந்திப்பு, மாவனல்லை ஜமாஅதே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவனல்லை பிராந்திய ஜமாஅதே இஸ்லாமி தலைவர் ஆர்.எம்.ரியாஸ் அவர்களின் தலைமையில் “விழுமிய வாழ்வு நலம் நாமும் சமூகம் “எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இவ் நிகழ்வில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைவர் உஸ்தாத் எம். எச். எம். உஸைர் இஸ்லாஹி அவர்கள் சிறப்பு அதிதியாகவும்,முன்னை நாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்,ரம்ய லங்கா கிளை பிரதிநிதி டாக்டர் அக்பர் அலி,ஹெல்த்தி லங்கா இயக்குனர் திரு சமிக ஜயசிங்க, ஜமாஅத்தின் கேகாலை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் இஸட். ஏ.எம்.பவாஸ்,மற்றும் இப் பிராந்திய பள்ளி வாசல் தலைவர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்ததோடு ,போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு திட்டத்தில் ஹெல்த்தி லங்கா நிறுவனத்தோடு சேர்ந்து ரம்ய லங்கா நிறுவனத்தினரும் இணைந்து செயற்பட முன்வந்து கைகோர்த்தனர்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)