இந்த நாட்டு மக்கள் ஏமாறுவதை பார்க்கும் போது மிக ஆச்சர்யமாக உள்ளது..! -முபாறக் அப்துல் மஜீத்
ஒருவன் ஒரு கட்சியில் எம்பியாக இருந்து விட்டு இன்னொரு கட்சிக்கு மாறினால் அவன் புனிதனாகிவிட்டான் என்று நினைக்கிறார்கள்.
இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை ஐ தே க அல்லது சுதந்திர கட்சி கூட்டு உறுப்பினர்களே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக இருந்து வருகின்றனர்.
நேற்றுவரை அமைச்சராக இருந்து கொள்ளையடித்தவன் இன்று எதிர்க்கட்சிக்கு மாறினான அவன் புனிதனாகிவிட்டானா?
நேற்று வரை எதிர்க்கட்சியில் இருந்தவன் இன்று ஆளுங்கட்சிக்கு வந்தால் அவனும் கொள்ளையடிக்கிறான்.
பாராளுமன்றத்தில் உள்ள பலர் 20 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்திலேயே இருக்கின்றனர். இவர்கள்தான் நாட்டை விற்றனர், விட்பதற்கு துணை போயினர்.
முஸ்லிம்களை பொறுத்தவரை ஹக்கீம், அதாவுள்ளா, ரிசாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், முஜிபுர்ரஹ்மான், ஹரீஸ், பைசல் காசிம் போன்றோர் எத்தனை காலமாக பாஎஆளுமன்றத்தில் உள்ளனர்? இவர்களால் நாடு பெற்ற நன்மை என்ன? குறைந்தது முஸ்லிம் சமூகமாவது ஒரு உரிமையையாவது பெற்றதா?
ஜேவிபி கூட 30 வருடத்துக்கு மேல் பாராளுமன்றத்தில் உள்ளது. அவர்களில் பலர் அரச கட்சிகளுக்கு பாய்ந்து கொள்ளையர்களாக மாறினர்.
ஒருவன் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறினால் அவன் புனிதனாகி விட்டான் என்று எண்ணும் மக்கள் இருக்கும் வரை இலங்கையை தூய தேசமாக்க முடியாது.
– முபாறக் அப்துல் மஜீத்
ஸ்ரீலங்கா உலமா கட்சி