அரகல நிகழ்வு நாட்டிற்கு எற்பட்ட கரைபடிந்த நிகழ்வாகும்..! -வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத்
அரகல நிகழ்வு நாட்டிற்கு எற்பட்ட கரைபடிந்த நிகழ்வாகும் என்று வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்மார்ட் தேர்தல் அலுவலகத்தை மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
அரகலையின் பின்னர் நாட்டை பெறுப்பெடுக்குமாறு முன்னாள் ஆட்சியாளரால் பலரிடம் வேண்டுகோல் விடுக்கப்பட்ட போது அவர்கள் பயத்தில் ஒதுங்கிய போது துணிந்து பாரம் எடுத்து நாட்டை கட்டியெழுப்பிய பெறுமை இன்றைய ஜனாதிபதியும் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறக்கூடியவருமான ரணில் விக்ரமசிங்க என்பதனை எவரும் மறந்து விடக்கூடாது.
மக்களின் அதிக வாக்குளைப் பெறுவதுடன் மாத்திரம் இல்லாமல் அதிகமான கட்சிகளின் ஆதரவினையும் பெற்று ரணில்விக்ரமசிங்க வெற்றிவாகை சூடுவார் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை.
நாட்டில் குழந்தைகளுக்கான பால்மா தொடக்கம் முதியோரின் மருந்துவரை தட்டுப்பாடான காலத்தில் வாழ்ந்த நமக்கு இன்று நிம்மதியுடன் எல்லா பொருட்களும் கிடைக்கக்கூடிய வகையில் வாழ்கின்றோம் என்றால் அந்த நிம்மதியை நமக்கு ஏற்படுத்தி தந்தவர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை.
ஜனாதிபதி சுயாதீன வேற்பாளர் அவர் எந்த கட்சி சின்னத்திலும் போட்டியிடவில்லை அவரைப்போன்று இந்த அலுவலகமும் எந்த கட்சி சார்பின்றி சுயாதீனமாக இயங்கும் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன், கோறளைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் வட்டார அமைப்பாளருமான பி.லட்சுமி மற்றும் கல்குடா தொகுதியின் பிராந்திய அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)