திக்குவல்லை ஸூம்ரியின் நட்பு எனும் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா
நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸூம்ரியின் நட்பு எனும் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா ஞயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கொழும்பு 10 மருதானை தபால் தினைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுகளுக்கு நாடறிந்த எழுத்தளார் ஆசிரியர் திக்குவல்லை கமால் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர் எஸ்.எம். மரிக்கார் கலந்து கொண்டார் அத்துடன் கௌவர அதிதியாக வாசனா தனியார் வைத்தியசாலையின் தலைவரும் தொழிலதிபருமான கலாநிதி ரம்சி அமானுல்லாஹ் விசேட அதிதியாக ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் தலைவர் என்.எம்.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும் சட்டத்தரனி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சட்டத்தரனி ரம்சீன், சால்தீன் எம் ஸப்ரி ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து வரவேற்புரையை திக்குவல்லை ஸப்வான், தலைமையுரை திக்குவல்லை கமால், நூலாசிரியர் அறிமுகத்தினை விடிவெள்ளி ஆசிரியா் சார்பாக ஊடகவியலாளர் சுகையில், வாழ்த்துக் கவிதைகளை கவிஞர் எம்.எஸ்.அப்துல் லத்தீப், வெலிகம ரிம்சா முஹம்மத், சிறுகதை நுாலாய்வினை கலாநிதி எம்.சி ரஸ்மின், ஆகியோர் நிகழ்தினார்கள். அதனைத் தொடர்ந்து சஞ்சாரம் பிஞ்சு மனம் நிகழ்ச்சிகளை ஸஹாரா இஸ்பஹான், இஸ்ஸா இஸ்பஹான், அத்துடன் நட்பு சிறுகதைத் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு கதையை வானொலிக் கலைஞர்களான சில்மியா ஹாதி, மற்றும் ஜூனைத் எம் ஹாரிஸ், ஆகியோர்களும் வழங்கினார்கள். நுாலின் முதற்பிரதியை தனது தாய்க்கு ஸூம்ரி வழங்கி வைத்தார்.விசேட பிரதியை கலாநிதி ரமசி அமானுல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டது.
பிரபல வானொலி சஞ்சாரம் சமூகச் சித்திரம் நிகழ்ச்சி வானொலிக் கலைஞர்களான மஹ்திஹஸன் இப்ராாஹீம், நேரஹம் சஹீட், திக்குவல்லை ஸப்வான் ஆகியோறும் அவர்களின் கலை நிகழ்ச்சியை மேடையேற்றினார் கள். ஏற்புரையை திக்குவல்லை ஸூம்ரி, நிகழ்த்தினார்கள் நிகழ்ச்சியை ரஸ்மி மௌலானா, மற்றும் பாத்திமா ரீசா ஹூசைன் ஆகியோர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். மண்டபம் நிறைந்த வருகையாளர்கள் காணப்பட்டது. அத்துடன் சகலருக்கும் நுால்களை பெற்றுக் கொண்டனர். அத்துடன் நிகழ்சி முடிவடைந்து சகலருக்கு பகற்போசனமும் வழங்கப்பட்டது.
இந் நுல் வெளியீட்டில் கலை நிகழ்ச்சிகள் , கவி வாழ்த்துக்கள்., இசை பாடல் , ,நாடக நிகழ்வுகளும் வானொலி கலைஞர்களினால் சிறப்பாக இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திக்குவல்லை ஸூம்ரி மாணவர் பருவத்திலேயே இலக்கியத்தில் பிரகாசிப்பவர், இவரது தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டிகளில் மூத்தவர்களோடு மோதி வெற்றி பெற்று பெயர் பதித்தவர், வானொலி முஸ்லிம் சேவைக்கு நிறையவே பங்களிப்பு வழங்கியவர் திக்குவல்லை எனும் ஊரின் பெயரை உலகுக்கு கொண்டு சென்றவர். அதிகமான வானொலி சேவயைில் ஊடுருவல் நாடகங்கள் சமூகக் பிரதிகளை எழுதிய சாதனையாளர் சுமார் பத்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சஞ்சாரம் நிகழ்ச்சிக்கு அதிகமான பிரதிகள் எழுதியவர், விடிவெள்ளி பத்திரிகையில் தொடர்ச்சியாக சிறுகதைகள் யதார்த்தமாகும் தத்ரூபமாகவும் வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றவர். வானொலி முஸ்லிம் சேவையின் கலைஞரான இவர் இலக்கிய விழாக்கலை இனிதாகத் தொகுத்து வழங்குவதில் தன்னகரற்றவர் சிறந்த ஒவியர் பாடகர், பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இலங்தை துறைமுக அதிகார சபையிலும் நிறைவேற்றுத் தரத்திலும் பதவி வகிப்பவர்.
(அஷ்ரப் ஏ சமத்)