உள்நாடு

மு.கா தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் பற்றியும், முனாபிக் தனம் பற்றியும் கதைப்பதற்கு நஷீர் அஹமட் எந்த வகையிலும் தகுதியற்றவர்; சட்டத்தரணி ஹபீப் றிபான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக தனக்கான ஒரு அரசியல் முகவரியை பெற்று தனது சுய இலாபத்திற்காக சமூக சிந்தனையின்றி சோரம் போன நஷீர் அஹமட் எமது பேரியக்கத்தின் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் பற்றியும் அதன் பிரதித் தலைவர் ஹிஸ்புல்லாஹ் பற்றியும் பேசுவதற்கு தகுதியற்றவர் என முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஏறாவூரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் நஷீர் அஹமட் “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டிசியின் தலைவர் றவூப் ஹக்கீம் ஒரு பொட்டணி வியாபாரி என்றும் அதன் பிரதித் தலைவர் ஹிஸ்புல்லாஹ் ஒரு முனாபிக்” என்றும் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் அறிக்கையாகவே இதனை சட்டத்தரணி ஹபீப் றிபான் வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கித்தின் முதிகில் ஏறி மாகாண சபை உறுப்பினர், முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவிகளுடாக அரசியல் அந்தஸ்தை பெற்று அதன் காரணமாகவே இன்று ஆளுநரா இருக்கும் அவர் கட்சியினையும் அதன் தலைமைகளையும் விமர்சிப்பதற்கு தகுதியற்றவர்.

தங்களது சுய இலாபங்களுக்காக தனக்கு அரசியல் முகவரியை தந்த கட்சியையும் கட்சி தலைமையையும் விமர்சிப்பதற்கு எந்தவகையிலும் தகுதி கிடையாது என்றும் இவ்வாறான சந்தர்ப்ப அரசியல்வாதிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் தூரமில்லை.” என்றும் தெரிவித்தார்.

“இவ்வாறனவர்களை அடையாளம் கண்டு மக்கள் மிக அவதானத்துடன் சிந்தித்து வெற்றி பெறக்கூடிய வெற்றி வாய்ப்பினை பெறக்கூடிய சஜீத் பிரேமதாசக்கு வாக்கினை அளித்து எமது ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *