கட்சித்தாவும் அரசியல் வாதிகளின் பின்னால் செல்வதற்கு இளைஞர்கள் தயார் இல்லை; கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளர் ரிஷாத் பாரூக்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண எழுச்சி மாநாட்டு நிகழ்வானது தற்போதைய அரசியல் காலத்தில் மிகவும் முக்கியமானதொன்று என்று நான் கருதுகின்றேன் என்று கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளர் ரிஷாத் பாரூக் தெரிவித்தார்.
நேற்று சாந்தாமருதுவில் இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மா வாட்ட இளைஞர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபா தலைமையில் பவுசி மைதானத்தில் இடம் பெற்றது.
மேலும் அவர் பேசுகையில், “குறிப்பாக எமது தலைமைத்துவமும்,கட்சியின் உயர் பீடமும் ஜனநாயக ரீதியாக எடுத்த தீர்மானமானது இளைஞர்கள் மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது என்பதனை சுட்டிக் காட்டுவதில மகிழ்ச்சி அடைகின்றேன்.
எமது கட்சியின் உருவாக்கமானது நேர்மையும்,மக்கள் நலனிலும் அக்கறைக் கொண்டதாக மட்டுமே இருந்துள்ளது என்பதை கட்சியின் ஒவ்வொரு போராளிகளும் நன்கு அறிந்து கொள்வார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற பிரதி நிதித்துவமானது இளைஞர்களின் பெரும் எண்ணிக்கையிலான வாக்குளினாலேயே கிடைக்கப் பெற்றது என்பதை மறுக்க முடியாது.
கட்சிக்கு மாறு செய்து செல்பவர்கள் இருந்தாலும்,அவர்களின் பின்னால் செல்லும்அளவுக்கு இளைஞர்கள் இன்றும் தயாரில்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இஞைர்களின் இலக்கு நோக்கிய பயணத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும்,அதனது தலைமையும் இட்டுள்ள அடித்தளம் என்பது மிகவும் உறுதியானது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
சுமூகத்தின் நலனை மையமாக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகளால் வேறு கட்சிகள் தளம்பிய நிலையில் இருப்பதை அவர்களது முதிர்ச்சியற்ற அரசியல் செயற்பாடுகளில் இருந்து காமுடிகின்றது.
இந்த நிலையில் எமது கட்சியானது சமூகத்தின் அரசியல் பாதுகாப்பிற்கான அரண் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த அரணை இளைஞர்களாகிய நாங்கள் பாதுகாப்பற்கான உறுதியினை இன்றைய எழுச்சி மாநாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவு படுத்தி,எமது இளைஞர்களின் இந்த எழுச்சி மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர்களின் பங்களிப்பு ஒரு புதிய வரலாற்றினை ஆட்சியாளருக்கு சொல்லி நிற்கும் என்ற செய்தியோடு, மீண்டும் ஒரு முறை மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்தில் ல் இந்த இளைஞர் எழுச்சி மாநாட்டினை இந்த பிர தேசத்தில் நடத்துவதற்கு முழுமையான சந்தர்ப்பத்தினை வழங்கிய எமது கட்சியின் தலைமைக்கும்,அது போன்று அதியுயர் பீடத்திற்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்)