உயர்தர மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கள்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கல்வி பொதுதர உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக பழைய கட்டிடத்தில் இடம் பெற்றது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். ஏ.றியாஸ், சமுர்த்தி முகாமைத்துவபணிப்பாளர், ஆர்.மதியழகன், பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் எம். ஐ. மாஜிதீன், கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.என்.எம்.சாஜஹான், ஏ.எல்.எம்.நியாஸ், எம்.எல்.சியாத், எம்.பி.எம்.அப்பாஸ், எம்.எஸ்.எப்.சுஹ்ரியா,எம்.யு.எஸ்.ஜெஸீமா,ஏ.எல்.சாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதான உரையினை பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் நிகழ்த்துகையில் மாணவர்கள் பரீட்சைக்கு பின் எவ்வாறான தொழில் துறைகளை தெரிவு செய்து கொண்டு தங்களது உயர் கல்வியை கற்று உயர் ஊதியங்களைப் பெற்றுக்கொண்டு நாட்டிற்கும் சமூகத்திற்கும் தனது குடும்பத்திற்கும் சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வினை சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். என்.எம்.சாஜஹான் தொகுத்து வழங்கினார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)