ஹிஸ்புல்லாவின் தாக்குதலால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் பெரியளவிலான தாக்குதல்களை அறிந்த இஸ்ரேல் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் இன்று அறிவித்தது.
காசாவில் ஹமாஸுடன் ஏற்கனவே போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ஹிஸ்புல்லாவால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant நாடு முழுவதும் 48 மணி நேர அவசர நிலையை அறிவித்தார்.
லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா, கடந்த மாதம் அதன் தளபதி ஃபுவாட் ஷுக்ரைக் கொலை செய்தமைக்கு ஆரம்ப பதிலடியாக இஸ்ரேலை நோக்கி பாரியளவிலான ட்ரோன்களை ஏவியது.