ஒட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு உணர்ச்சி கரமான கற்றல் திட்டம்
ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் சமூக உணர்ச்சிக்கான கற்றல் செயற்றிட்டத்தின் கீழ் தரம் 08 மற்றும் 09 மாணவர்களுக்கான உணர்ச்சி கரமான கற்றல் திட்டம் என்ற தொனிப்பொருளில் செயலமர்வு நேற்று (24.08.2024) ஓட்டமாவடி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் இடம் பெற்றது.
கல்லூரி முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்றது நிகழ்வின் வளவாளர்களாக கோளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ. நஜீப்கான், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உளவள மற்றும் மனிதவள ஆற்றுப்படுத்தல் உத்தியோத்தர் எம்.ரீ.எம்.அஸ்மி, கல்குடா ஜம்மியதுல் உலமா கல்குடா கிளையின் செயலாளர் ஆசிரியர் அல்-ஹாபிழ் எம். இஸ்ஸத் (நஹ்ஜி) ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.
பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி எப்.எஸ்.ஏ. றஷ்மியின் நெறிப்படுத்தலின் கீழ் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாசாலையின் பிரதி அதிபர் ஏ.பி. அஸ்மீர் உதவி அதிபர் ஏ.ஜி. அஸீஸுல் றஹீம், சிரேஷ்ட ஆசிரியர் ஏ.எல். இப்றாஹிம், தரம் 8ன் பகுதித் தலைவர் யூ.எல்.எம். தெளபீக் மற்றும் தரம் 8, 9ன் வகுப்பாசிரியர்கள், சிரேஷ்ட மாணவத் தலைவர், மற்றும் எனைய மாணவத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எம்.எம்.முர்ஷித்)