இன்றைய வானிலை
இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், சில பிரதேசங்களில் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், மணிக்கு 55-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் இருந்து புத்தளம் வரையிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் கடல் கொந்தளிப்பாகவும், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.