மறைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸின் மகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தூய தேசம் இஷாம் மரைக்கார்
மர்ஹும் டாக்டர் இல்யாஸ் முன்னாள் நகரப் பிதா மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அகிய இருவரும் ஒரு காலத்தில் இணைந்து செயல்பட்டு “பைத்துல் முகத்தஸ்” விடுதலைப் போராட்டத்தின் நினைவாக முன்னர் “செட்டி தெரு” என அழைக்கப்பட்ட தற்போதைய மஸ்ஜித் வீதிக்கு “பைத்துல் முகத்தஸ் வீதி” எனப் பெயரிட்டுப் பெயர்ப் பலகை நாட்டியத்தை மர்ஹும் டாக்டர் இல்யாஸ் பல சந்தர்ப்பங்களில் நினைவுபடுத்திப் பேசி இருப்பார். அவருடன் நெருக்கமாகப் பழகக் கூடிய பலரும் இவ்விடயத்தை அறிந்திருப்பார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு பாலஸ்தீன தூதுவராலயத்தின் அனுமதியுடன் மறைந்த நமது தலைவர் மர்ஹும் கே.ஏ. பாயிஸ் இன் ஜனாஸாவின் மீது பாலஸ்தீன கொடியைப் போர்த்துவதற்காக டாக்டர் இல்யாஸ் முனைந்த போது கே.ஏ பாயிஸின் குடும்பத் தரப்பிலிருந்து அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகப் பேட்டி ஒன்றில் டாக்டர் இல்யாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இன்று காலை டாக்டர் இல்யாஸின் புதல்வி ஜமீனா கமர்தீனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பின் ஊடாக எனக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதில் மர்ஹும் கே.ஏ பாயிஸின் ஜனாஸாவின் போது நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு “வாப்பா இது போன்ற விடயங்களை விரும்புவார், எனவே வாப்பாவின் விருப்பத்திற்குரிய செயல் ஒன்றை நீங்களே உங்கள் கையினால் நிறைவேற்ற ஆசைப்படுகிறேன் ஆகவே அவரின் போராளியான நீங்கள் இந்தப் பணியைச் செய்யுமாறு நான் வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
மரணித்த தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கும் ஒரு பாசமிகு மகளின் உணர்ச்சிப் பூர்வமான வேண்டுகோளினை மதித்து, நாம் அப்பணியை நிறைவேற்றியதில் அளவிலா ஆத்ம திருப்தியை அடைந்து கொண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களும் மர்ஹும் டாக்டர் இல்யாஸ் அவர்களினதும் தூய பணிகளைப் பொருந்திக் கொள்வானாக.
(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம் யூ.எம் சனூன்)