60 மீற்றர் ஓட்டப்போட்டியில் வடமாகாண சம்பியன் ஆனார் ரில்பி முஹம்மது ரனா
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற 12 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டி நிகழ்ச்சியில் 8 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து வடமாகாணத்தின் சம்பியனானார் பொற்கேணி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மாணவன் ரில்பி முகம்மது ரனா.
கல்வி அமைச்சின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வட மாகாணத்திற்கான போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அதில் கடந்த புதன்கிழமை (21) இடம்பெற்ற 12 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பொற்கேணி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்ற ரில்பி முகம்மது ரனா முதல் மற்றும் அறையிறுதி சுற்றுக்களில் முதலிடம் பிடித்ததுடன் இறுதிப் போட்டிக்கும் தெரிவானார். அதற்கமைய இடம்பெற்ற இறுதிச் சுற்று போட்டியில் போட்டித் தூரத்தை வெறும் 8 செக்கன்களில் நிறை செய்து முதலிடம் பிடித்ததுடன் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்து அகில இலங்கை ரீதியிலான போட்டிக்குள் தடம்பதித்தார் ரில்பி முஹம்மது ரனா என்பது குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)