ஸ்ரீ.மு.கா. அம்பாறை செயற்குழுக் கூட்டத்தில் சர்ச்சை; பாலமுனை மு.கா. அமைப்பாளர் இடை நிறுத்தம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல். அலியார், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் உடனான முரண்பாட்டைத் தொடர்ந்தே, இவ் இடை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டம், அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது, கைகலப்பாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )