கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் இரண்டு பேருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம்..! – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல். பரீட் ஆகியோரை கட்சியிலிருந்து இடை நிறுத்தவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் எடுத்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதில் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபின்க்கு கட்சி நேரடியாக நடவடிக்கை எடுக்கும் எனவும்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.பரீட் அவர்களை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்போம்.
இந்த தேர்தலில் நமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமைய கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை முழுமையாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
(எம்.பஹத் ஜுனைட்)