நாகூர் கனியின் “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா
தமிழ் எழுத்துத்துறையில் ஆறு தசாப்தங்களை நிறைவு செய்த, ‘சத்திய எழுத்தாளர்’ கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர்கனி ஆய்வு செய்த மாநபி பற்றிய “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்” எனும் நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் (26) திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு, கொழும்பு – 07, தர்மபால மாவத்தை, ஜே. ஆர். ஜயவர்தன நிலைய மண்டபத்தில், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் சிறப்புரையையும், ‘வகவத்’ தலைவர் நஜ்முல் ஹுசைன் நயவுரையையும் நிகழ்த்த, ‘சந்தக்கவிமணி’ கிண்ணியா அமீர் அலி, கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் ஆகியோர் வாழ்த்துக் கவிகளைப் பாடுவர்.
கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி ஆசிரியர் இர்ஷாத் ஹுசைன் வரவேற்புரை வழங்க, நூலாசிரியர் ஏற்புரையாற்ற, டாக்டர் ருஸைகா கனி நன்றியுரையை நிகழ்த்துவார். ‘வகவச்’ செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் தொகுத்து வழங்கும் இச்சிறப்பு நிகழ்வுக்கு, அனைவரும் வருகை தந்து சிறப்பிக்கும்படி, ஏற்பாட்டுக்குழு அன்போடு அழைக்கின்றது.
‘தமிழ் இலக்கிய சிந்தனைகளையும், செம்மல் நபியையும் இணைத்து செய்யப்பட்ட ஆய்வு நூல்’, இது என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )