விளையாட்டு

இங்கிலாந்தின் வேகத்திற்கு பதில்கொடுக்குமா இலங்கையின் துடுப்பாட்ட மட்டைகள்? இன்று முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு மென்செஸ்டரில் ஆரம்பிக்கின்றது.

சுற்றுலா இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறுகின்றது. அதற்கமைய தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்து பயணித்து முதலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அதில் 7 விக்கெட்டுக்களால் தோற்றுப் போனது.

இப் போட்டியில் இலங்கை சார்பில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் அணித்தலைரான தனஞ்சய டி சில்வா ஆகியோரே துடுப்பாட்டத்தில் சற்று இலங்கை அணிக்காக போராடியிருந்தனர். பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய மாத்திரமே சற்று ஆறுதல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கின்றது. இதில் இங்பகிலாந்து அணியின் தலைரான இளம் வீரரான ஒலி போப் முதல் முறையாக இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடாத்துகின்றார். அத்துடன் இதுரையில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 36 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க , இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைக்கு வந்துள்ளன.

மேலும் இவ்விரு அணிகளும் இங்கிலாந்தில் மோதிய 18 போட்டிகளில் இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் றெ;றி பெற்றிருக்க, இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மிகுதி 7 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைக்கு வந்துள்ளன. அதற்கமைய இன்றைய போட்டி இவ்விரு அணிகளில் எந்த அணிக்கு மிகுந்த சாதகத்தினை வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதற்கமைய இன்றைய தினம் ஆரம்பிக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியின் பதினொருர் விபரம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதில் அணித்தலைவராகவும், மத்தியவரிசை துடுப்பாட்ட மற்றும் பகுதி நேர சுழல்பந்து வீச்சாளராகவும் தனஞ்சய டி சில்வா செயற்படவுள்ளார். அத்துடன் துடுப்பாட்ட வீரர்களான திமுத், மதுஷ்க, மெத்யூஸ், சந்திமால் ஆகியோரும், விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸும், சகலதுறை வீரரான கமிந்து மென்டிஸும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இங்கிலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமானது என்பதனால் அசித பெர்ணான்டோ மற்றும் விஷ்வ பெர்ணான்டோவுடன் இளம் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான மிலான் ரத்ணாயக்க இன்றைய போட்டியின் இணைக்கப்பட்டுள்ளதுடன் சர்தேச டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக் கொள்கிறார். மேலும் சுழல்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூரிய பெயரிடப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு சற்று ஆறுதல் கொடுத்துள்ளது.

இலங்கையின் பதினொருவர் விபரம்

திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் (வி.கா.), தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர் ), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, மிலான் ரத்னாயக்க

இப்போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியைப் பொறுத்தரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியின் தலைவரான சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் உபாதை காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேறியிருக்க அவருக்கு பதிலாக ஒலி போப் அணியை வழிநடாத்துகின்றார். அவருடன் துடுப்பாட்டத்தில் லவ்ரண்ஸ், பென் டக்கட், ஜோ ரூட், ஹென்றி புரூக் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இவவர்களுடன் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக ஜெமி ஸ்மித் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும் வேகப்பந்துவீச்சு, சகலதுறை வீரரான கிரிஸ் வோக்ஸ் பெயரிடப்பட்டிருக்க அவருடன் மேலதீகமாக அக்கின்ஸன், மெத்திவ் பொட்ஸ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் அடங்களாக 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் காண்கின்றது இங்கிலாந்து. அத்துடன் சுழல்பந்து வீச்சாளராக சொஹைப் பசீர் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் பதினொருவர் விபரம்

டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (அணித்தலைவர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (p.கா), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வூட், ஷோயிப் பஷீர்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *