43 வீத வாக்குகாளால் சஜித் வெற்றி பெறுவாராம்..! – கருத்துக்கணிப்பில் தகவல்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் குறித்ததான கருத்துக் கணிப்பொன்றை, Institute for health policies (IHP)
எனும் அமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதன்பிரகாரம், வெளியாகியுள்ள
IHP அமைப்பின் கணிப்பின்படி, சஜித் பிரேமதாஸ வெற்றி வேட்பாளராகக் கருதப்படுகிறார்.
அவர் 43 வீத வாக்குகளைப் பெறுவார் என, இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அனுர 30 வீத வாக்குகளையும், ரணில் 20 வீத வாக்குகளையும், நாமல் 7 வீத வாக்குகளையும் பெறுவார்கள் என, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், 39 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், இவர்களில் முதன்மை வேட்பாளர்களான நால்வரை மட்டும் கணிப்பீடு செய்ததாக, அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )