உள்நாடு

வடக்கிலிருந்து வடமத்தியமாகாணத்தை சென்றடைந்த சஹ்மி ஷஹீதின் சரித்திர நடை

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் துவங்கிய சஹ்மி சஹீதின் “சிமி ஶ்ரீலங்கா நடைப்பவனி” எனும் வரலாற்றுப் பயணம் , 18 ஆம் திகதி அன்று, 37 ஆவது நாளாக தொடந்து, வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர நகரத்தைச் சென்றடைந்துள்ளது.

கிழக்கு ,வடக்கு ஆகிய மாகாணங்கள் வழியாக வடமேல் மாகாணத்தை சென்றடைந்த இவருக்கு ,சர்வ இன மக்களும் மிகுந்த வரவேற்பு அளித்ததோடு,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,சட்டத்தரணி உணைஸ் பாரூக் அவர்கள் சஹ்மியை நேரில் சந்தித்து வாழ்த்தி,நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்ததோடு, சஹ்மிக்கு சிறுவயதில் புனித அல்குர்ஆன் ஓதுவதற்கு கற்பித்த மௌலவி ஒருவரும் சந்தித்து வாழ்த்திப் பிரார்த்தனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்,கடந்த 18 அன்று அனுராதாபுரத்தை சென்றடைந்த போது அனுராதபுர மக்கள் உட்பட பேருவளையிலிருந்து பலரும் சென்று இவரை உற்சாகப்படுத்தி வரவேற்றனர். சஹ்மியின் இப்பயணத்தின் அடுத்தகட்டமாக,புத்தளம்,நீர்கொழும்பு வழியாக கொழும்பை அடைந்து ,காலி வீதியூடாக பேருவளையைச் சென்றடையவுள்ளார்.

கொழும்பு மாநகரில் கால் பதிக்கும் போது இவருக்கான பலத்த வரவேற்பு எதிர்பார்க்கப்படுவதோடு, சஹ்மியை மேலும் உற்சாகமூட்டுவதற்காக,பாக்கு நீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்த 15 வயது இளம் சாதனையாளன் ஹஸன் ஸலாமாவும் சேர்ந்து பேருவளை வரை நடை நடைவனியில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , சஹ்மியின் சொந்த மண் பேருவளையில் இவர் கால்பதிக்கும் போது மாபெரும் வரவேற்பு வழங்கப்படவுள்ளதாவும் ,அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருவதாகவும் , “சிமி ஶ்ரீலங்கா நடைபவனி ” யின் பூரண அனுசரணையாளர் சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வரவேற்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் சகல பிராந்திய மக்களும் வருகை தரவுள்ளதாகவும்,பேருவளைக்கு வரும் மக்களை சிறந்த முறையில் உபசரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


(பேருவளை : பீ.எம் முக்தார்)

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *