உள்நாடு

ஓட்டமாவடி கூட்டத்தில் ஹரீஸுக்கு காலக்கெடு விதித்த ரவூப் ஹக்கீம்

நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய கல்குடாத்தொகுதி செயற்பாட்டாளர்களுடனான விஷேட கலந்துரையாடல் நேற்று (19) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கட்சியின் தேசியத்தலைமை ரவூப் ஹக்கீம் அவர்களின் பற்றுதலுடன் இடம்பெற்ற இவ்விஷேட கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், அமைப்பாளர், உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், போராளிகள், அபிமானிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது, நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸ அவர்களின் வெற்றிக்காக ஒத்துழைக்க வேண்டுமென்பதுடன், கட்சியும் தலைமையும் எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு தேர்தல் பணிகளை நேர்த்தியாக முன்னெடுக்க களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், கட்சியின் உயர்பீடமும் தலைமையும் எடுத்த முடிவுக்கு கட்டுப்படாமல் வெளியில் இருக்கும் அனைவரும் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் கடும் தொணியில் வேண்டுகோள் விடுத்தார்.

திருமலை மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக், அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைஷல் காசீம் ஆகியோர் கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டுள்ள தேர்தல் பிரசார மேடைகளில் காணப்படும் அதே வேளை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மெளலானா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளமையினால், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

அதே வேளை, அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இதுவரை தனது சரியான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், அவருக்கான எச்சரிக்கையாக இதனை தலைவர் சூசமாக குறிப்பிட்டிருக்கலாம் என கட்சியின் கல்குடாத்தொகுதி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *