அக்கரைப்பற்றில் அனுஷ்டிக்கப்பட்ட சுஹதாக்கள் தினம்..!
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட இனவன்முறை காரணமாக அக்கரைப்பற்றிலும் அநியாகமாக கொலைசெய்யப்பட்ட ஊனமுற்ற, காயமடைந்த முஸ்லிம்களை நினைவு கூருமுகமாக அக்கரைப்பற்று சுகதா ஞாபகார்த்த அமைப்பினரால் ஒழுங்கு செய்யபட்ட சுகதாக்கள் ஞாபகார்த்த நிகழ்வு அண்மையில் (ஆகஸ்ட் 6) வழமைபோன்று இம்முறையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஜூம்ஆ பட்டினப்பள்ளிவாயலில் அஸர் தொழுகையின் பின்னர் அமைப்பின் செயலாளர் எம்.எல். மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கத்தமுல் குர் ஆன் தமாம், சுகதாக்கள் ஞாபார்த்த உரை, சுகதாக்கள் ஞாபகார்த்த ஆவணப்படுத்தலுக்கான விளக்க உரை, “துஆப்பிராத்தனை” ஆகியன முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளன.
அக்கரைப்பற்று ஜெம்மியதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரும் மூத்த உலமாவுமான மௌலவி எம்.ஐ.எம்.அப்துல் லதீப் (பஹ்ஜி) தலைமையில் உலமாக்கள் கத்தமுல் குர் ஆன் தமாம் நடாத்தப்பட்டது. இனிநிகழ்வில் பெருமளவிலான மௌலவிமார்க்கள் கலந்துகொண்டனர்.
சுகதாக்கள் ஞாபகார்த்த உரையை கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல்.எம்.அஷ்ரப் (ஷர்கீ) நிகழ்த்தினார்.
(பகுர்)