உள்நாடு

அலி சாஹிர் எம். பி யிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ்

கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த அலி சாஹிர் மௌலானா எம். பி. மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அவரைக் கட்சியிலிருந்து இடை நிறுத்தி, அவரிடம் விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *