கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சுற்று சூழலை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பித்து வைப்பு..!
பாடசாலையின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் சீராக இடம்பெறுவதற்கு உட்சூழலும் வெளிச்சூழலும் சுத்தமாகவும் சுகாதாரமாவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதற்கிணங்க கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்களின் வழிகாட்டலில் சூழலை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையை கவின்கலை உடையதாக அழகு படுத்தும் வேலைத் திட்டத்தின் மூன்றாவது பகுதியின் செயற்பாடுகள் அதற்குப் பொறுப்பான ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் அலங்கார மரங்களை நடும் ஒரு பகுதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர், பாடசாலை அதிபர் ஏ. ஜி. எம். றிசாத் ஆகியோர் அலங்கார மரங்களை நட்டு, இத்திட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்தனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
