உள்நாடு

ஆங்கில இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட”The Sweet Treat Gala” சிறுவர் சந்தை..!

வியாழக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் 11.00 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர்களுக்கான சந்தை அல் அக்ஸா தேசிய பாடசாலை பாடசாலையின் புதிய அதிபர் U. M. M. அமீர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

தரம் 06 முதல் 11 ஆம் தரம் வரை ஒவ்வொரு தரத்திற்கும் குறித்த நேரம் ஒதுக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட நேரத்தினுல் குறித்த தரத்திற்குறிய மாணவர்கள் தங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டனர்,

இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம் பெற உதவி செய்த அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், வகுப்பாசிரியர் கள், பாட ஆசிரியர்கள், மாணவர்கள், அல் அக்ஸா தேசிய பாடசாலை ஆங்கில இலக்கிய சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், அனைவருக்கும் ஆங்கில பிரிவு(English Unit) சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

(ரிஸ்வி ஹூசைன்- கல்பிட்டி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *