2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம் 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும்..! -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம். 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா வெகு விரைவில் அடையும் என்று புதுதில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதுதில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார். நாட்டின் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்ட்டது. இந்நிலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தார். செங்கோட்டையில் பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து புதுதில்லி செங்கோட்டையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதனை தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி தலைநகர் புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றியதை அடுத்து ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து 11வது முறையாக செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்ற உள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
78-வது சுதந்திர தினத்தையொட்டி புதுதில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது ; சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். இந்திய நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்.
40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தனர். அடிமைத்தனமான மனநிலையை கைவிட வேண்டிய தருணம் இது. “சுதந்திரத்திற்காக, உயிரையே விட முன்னோர்கள் துணிந்தார்கள், வளர்ச்சிக்காக நம் வாழ்வை அர்ப்பணிக்க முடியாதா? கடந்த சில ஆண்டுகளாக பேரிடர்களை எதிர்கொண்டாலும் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்போம். நாட்டை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக பலர் உழைத்து வருகின்றனர். விவசாயிகள், ராணுவ வீரர்கள் நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறார்கள்.
தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. நமது அனைவரது கனவுகள் மற்றும் நோக்கங்களை உள்ளடக்கியதாக விக்சித் பாரத் அமைந்துள்ளது. திறன்பெற்ற இளைஞர்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை சிலர் வழங்கியுள்ளனர்40 கோடி இந்தியர்களால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது; 140 கோடி பேர் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம். 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா வெகு விரைவில் அடையும். ஜல்ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. உலகின் மிகப் பெரும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். 2047ல் வளர்ந்த இந்தியா என்பது வெற்று முழக்கம் அல்ல; அது 140 கோடி இந்தியர்களின் உறுதி.தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நடத்தினோம்.
தேசத்துக்கே முக்கியத்துவம் அளிப்போம். நாடு வளர்ச்சியடைய சீர்திருத்தங்கள் மிக முக்கியம். இந்தியாவில் நீதித்துறையில் மாற்றம் தேவை; மாற்றங்களை கொண்டு வருவோம். நாட்டுக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டு வருகிறோம். நாங்கள் கொண்டு வரும் மாற்றங்கள் அரசியல் சார்ந்தது அல்ல, நாட்டின் முன்னேற்றத்தை சார்ந்தது. இந்திய வங்கிகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. உள்ளூர் தயாரிப்புகளுக்கு மக்கள் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு என்ற சூழல் நிலவுகிறதுஉலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா வெகு விரைவில் அடையும்.
ஜல் ஜீவன் திட்டத்தால் நாட்டில் 15 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அரசை மக்கள் தேடிச் செல்லும் நிலை மாறி, மக்களை நாடி அரசே நலத்திட்டங்களை வழங்குகிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்தையும் தகர்ப்போம். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களில் 10 கோடி பெண்கள் இணைந்துள்ளனர். இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளோம். நடுத்தர மக்கள் சிரமமின்றி வாழ பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன”அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்வியிடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்கானிக் உணவுகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ள நிலையில், அந்த தேவையை இந்தியா நிறைவேற்ற வேண்டும். பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் தரம் வரும் காலங்களில் சர்வதேச தரமாக மாற வேண்டும். என்று கூறினார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)