ரிஷாத், சஜித்துக்கு ஆதரவு என்றதும் வவுனியாவில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி..!
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று (14) தெரிவித்ததை அடுத்து, வவுனியாவில் அவரது ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பட்டானிச்சூரில் ஆதரவாளர்கள் இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
( ஐ. ஏ. காதிர் கான் )