விளையாட்டு

நாளை மறுதினம் ஆரம்பமாகும் “Sri Lanka Sports Fiesta 2024” T10 தொடர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “Sri Lanka Sports Fiesta 2024” T10 கிரிக்கெட் போட்டி இம்மாதம் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

டயலொக் அனுசரணையுடன் இடம்பெறவுள்ள இத் தொடரில் இ நாடு முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைத்துஇ விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கின் பிரமாண்டமான கொண்டாட்டத்தை வழங்கவுள்ளது. இம் மாதம் 16 ஆம் திகதி தொடங்கி, 18 ஆம் திகதி பரபரப்பான இறுதிப் போட்டியில் முடிவடையும் மூன்று அதிரடியான நாட்களில் இந்த போட்டி நடைபெறும்.

T10 கிரிக்கெட் தொடரில் இலங்கையின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 டைனமிக் அணிகள் இடம்பெறும். அதற்கமைய கொழும்புஇ கண்டிஇ காலி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிக்கும் நாட்டின் புகழ்பெற்ற மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்களை அணியின் தலைவராகக் கொண்டுள்ளது.

மேலும் இத் தொடரின் போட்டிகள் கொழும்பின் இரண்டு கிரிக்கெட் மைதானங்களான ப்ளூம்ஃபீல்ட் மற்றும் தர்ஸ்டன் மைதானங்களில் நடைபெறும். இந்த மைதானங்கள் மறக்கமுடியாத கிரிக்கெட் நிகழ்வுகளை நடத்தும் ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளன, மேலும் அவை அனைத்தும் வேகமான மற்றும் உயர்-ஆக்டேன் வூ வடிவமைப்பைக் காண தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *