உள்நாடு

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முயற்சிக்கும் ஜனாதிபதி : இலங்கை நீதிக்கான மையம் முறைப்பாடு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள, தற்போதைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்ட விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக, இலங்கை நீதிக்கான மையம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
குறித்த முறைப்பாட்டில், “ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, முகப்புத்தக இடுக்கைகளுக்கான
“( post ) View, Comment, Like” போன்றவற்றை செயற்கையான முறையில் அதிகரிக்க, “போட்ஸ்கள்” (bots) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான  “View, Comment, Like” என்பன போலி முகநூல் கணக்குகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
இச் செயற்பாடானது, வாக்காளர்கள் மத்தியில் குறித்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமான ஆதரவு இருப்பதாக, ஒரு தவறான புரிதலை ஏற்படுத்துவதால், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என, இலங்கை நீதிக்கான மையம், தேர்தல்கள் ஆணைக்குழுவைக்
கோரி உள்ளது.
இவ்வாறு, செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவது, “பேஸ்புக்” நிறுவனத்தின் சமூக தர நிலைகள் “(Community Standards)”
மற்றும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுவதாக அமைந்துள்ளதாகவும், இலங்கை நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள், சிறந்த நியாயமான தேர்தல் ஒன்றை இந் நாட்டு மக்கள் சந்திப்பதற்கும், தங்களுக்கு விரும்பிய வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான உரிமையை மட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும், இலங்கை நீதிக்கான மையம், குறித்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *