மாத்தளை மாவட்டத்திற்கான தற்காலிக காதிநீதவான் நியமனம்..!
மாத்தளை மாவட்டத்திற்கான காதிநீதவான் அண்மையில் பதவி நீக்கப்பட்டதையடுத்து காலியான அப்பதவிக்கு மாத்தளை மாவட்டத்திற்கான புதிய நிரந்தர காதிநீதவான் ஒருவரை நியமனம் செய்யும் வரையில் தற்காலிகமாக கடமைக்கு மேலதிகமாக ( Cover Duties) உடுநுவர பகுதி காதிநீதவான் எப். .எம். நியாஸ் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் அன்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கல்ஹின்ன காலஞ்சென்ற பலீல்தீன் தம்பதிகளின் புதல்வராவார்
திங்கள் முதல் வியாழன் வரை காலை 8.30 மணி முதல் 1.30 வரை கெலிஒய இல. 4/7, தவுலகல வீதியிலமைந்த அவரது காரியாலயத்தில் விவாக விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது