ஒரே குடும்பத்தைச் சேர்ந்த றிப்கான், றயிஸ்கான் Slicts தொழில்நுட்ப அதிகாரிகளாக நியமனம்
காத்தான்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது றயிஸ்கான் மற்றும் மௌலவி முகம்மது றிப்கான் (ஜமாலி) ஆகியோர் (SLICTS) இலங்கை தகவல் மற்றும் தொடல்பாடல் தொழிநுட்ப அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் முகம்மது ஐயூப்கான் JP – சித்தி றபீனா தம்பதியினரின் மகன்களான முகம்மது றயிஸ்கான் மற்றும் முகம்மது றிப்கான் ஆகியோர் 2024 யில் நடைபெற்ற இலங்கை தகவல் மற்றும் தொடல்பாடல் தொழிநுட்ப சேவையில் வகுப்பு 2 தரம் ll க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்தப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்று கடந்த மாதம் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் தேர்வுபெற்று இலங்கை தகவல் மற்றும் தொடல்பாடல் தொழிநுட்ப சேவைக்கு (SLICTS) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் நிலைநாட்டியுள்ள இச் சாதனையானது காத்தான்குடி மண்ணைப் பொறுத்த வரையில் ஒரு மிகப் பெரும் அடைவாகும். இவர்கள் காத்தான்குடி மத்திய கல்லூரியின் (தே.பா)யில் கல்விகற்ற மாணவர்களாவர்.