உள்நாடு

36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

19 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 16 சுயாதீன வேட்பாளர்கள் மற்றும் வேறு கட்சி சார்பில் ஒருவர் என 36 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நாமல் ராஜபக்ச மாத்திரமே இன்னமும் கட்டுப்பணத்தை செலுத்தவில்லை.

நாளை புதன்கிழமை நாமல் ராஜபகச் தமது கட்டுப்பணத்தை செலுத்த உள்ளார். இந்த நிலையில் நாமல் ராஜபக்ச என்ற பெயரில் சட்டத்தரணி ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் தமது கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, அரகலய போராட்ட குழுக்கள் சார்ப்பில் நிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி நுவான் போபகே ஆகியோரும் இன்று தமது கட்டுப்பணத்தை செலுத்தியியுள்ளனர்.

நாளை பிற்பகல் 12 மணிவரை கட்டுப்பணத்தை செலுத்த வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *