உலகம்

2036-ல் இந்திய மக்கள் தொகை 152.2 கோடியை உயரும் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் தகவல்..!

2036-ல் இந்திய மக்கள் தொகை 152.2 கோடியை உயரும் என்று புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் `பெண்கள் மற்றும் ஆண்கள் 2023′ என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2036-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என எதிர்பார்க்கப் படுவதாகவும், 2011-ல் பெண்கள் சதவீதம் 48.5 ஆக இருந்த நிலையில், 2036-ல் 48.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.அதாவது, இந்தியாவில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என பாலின விகிதம் இருந்தது. இது 2036-ம் ஆண்டில் ஆயிரத்திற்கு 952 ஆக உயரும் எனவும், இது பாலிய சமத்துவத்திற்கான நேர்மறை குறியீட்டை காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.15 வயதிற்குட்பட்ட தனி நபர்களின் வீதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருவூறுதல் குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கால கட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை கருவூறுதல் சதவீதம் 20-24 வயதில் 135.40-ல் இருந்து 113.6 ஆக குறைந்துள்ளது. 25-29 வயதில் 166-ல் இருந்து 139.6 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் 35-39 வயதில் கருவூறுதல் விகிதம் 32.7 சதவீதத்தில் இருந்து 35.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *