விளையாட்டு

களுத்துறை லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு பூரண அனுசரணை வழங்க முன்வந்துள்ள ஏ.என்.ஜெம்ஸ் (A.N.Gems) நிறுவனம்..!

களுத்துறை மாவட்டத்தில் முன்னணி உதைப்பந்தாட்ட கழகமான பேருவளை சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பேருவளை சீனன்கோட்டை ஏ.என்.ஜெம்ஸ் (A.N.Gems) களுத்துறை லீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு பூரண அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான காசோலை கையளிக்கும் நிகழ்வு சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் நடைபெற்றது.ஏ.என்.ஜெம்ஸ் உரிமையாளர்களான அர்க்கம் அஸ்லம்,நபீல் இஸ்மத் ஆகியோர் 500,000.00ரூபாவுக்கான காசோலையை இதன்போது கழக தலைவர் முஹம்மத் இஹ்ஸாஸ், உபதலைவர் அல்-ஹாஜ் அன்ஸார் ஜுனைத்,செயலாளர்ஹிஸான் ஹாசிம், முகாமையாளர் ஸாலி இஸ்மாயில், கழக உப கெப்டன் முஹம்மத் முஸாஹில் உட்பட விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் கையளித்தனர்.

களுத்துறை உதைப்பந்தாட்ட சங்கம் நடத்தும் இச் சுற்றுப்போட்டியில் 16 முன்னணி விளையாட்டு கழகங்கள் பங்கு பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏ,பி இரு குழுக்களாக சுற்றுப்போட்டியில் அணிகள் மோதுகின்றன.

கடந்த 03.08.2024 இல் களுத்துறை வேர்னன் பெர்ணாந்து விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் பெருந்தொட்டை விளையாட்டுக் கழகமும் மோதியபோது சன்ரைஸ் அணி 9-0 என்ற கோள் விதத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சுற்று போட்டிகள் எதிர்வரும் 25-8-2024 திகதி இடம்பெறவுள்ளன. ஏ குழுவில் எட்டு அணிகள் பங்குபற்றுவதோடு 7 போட்டிகள் நடைபெறும்.

சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் பயிற்சியாளராக கொழும்பை சேர்ந்த எம்.ரஹ்மானும் கோல்காப்பாளர் பயிற்சியாளராக களுத்துறையைச் சேர்ந்த மனோஜும் கடமையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய ஸன்ரைஸ் விளையாட்டுக் கழக செயலாளர் எம்.ஹிஸான் ஹாசிம் – களுத்துறை உதைப் பந்தாட்டச் சங்கம் நடத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்க முன்வந்த ஏ.என்.ஜெம்ஸ் உரிமையாளருக்கு நன்றி கூறினார். உதைப்பந்தாட்ட துறையை முன்னேற்ற மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏ.என்.ஜெம்ஸ் (A.N.Gems) வழங்கும் ஒத்துழைப்பை இம்மாவட்ட உதைப்பந்தாட்ட வீரர்கள் மறக்க மாட்டார்கள் எனவும் கூறியிருந்தார்.

ஐந்து தசாப்தங்களை பூர்த்தி செய்துள்ள சீனன்கோட்டை ஸன்ரைஸ் கழகம் மாவட்ட,மாகாண,தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் போட்டிகளில் பங்கு பற்றிய வீரர்களை உருவாக்கிய ஒரு முன்னணி விளையாட்டுக் கழகமாகமாகும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இதன் 50 ஆவது வருட பூர்த்தி விழாவை மிக விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

 

(பேருவளை : பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *