உள்நாடு

சமீரகம பாடசாலையில் வரலாற்று நிகழ்வு..!

புத்தளம் கல்வி வலயத்தின் பெருக்குவட்டான் சமீரகம பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக “மாணவ தலைவர்கள் ஊடாக சமூகத் தலைவர்களை உருவாக்குவோம்” எனும் கருப்பொருளில் சிறப்பான நிகழ்வொன்று அண்மையில் (09) நடைபெற்றது.

இந்நிகழ்வானது அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம். எம்.மிஹ்லார் தலைமையில் பாடசாலை திறந்த வெளியரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட 18 பேரும் பாடசாலைக்குரிய தலைமைத்துவ சீருடையுடன் விழா மேடையில், மகுடம் சூட்டி, இலச்சினை அணிவித்து,பெற்றோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார்கள்.

அதிபரின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் வலய கல்விப் பணிமனை சார்பில் பாட இணைப்பாளர் வீ.அருணாகரன், மதுரங்குளி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெர்னாண்டோ லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது போலீஸ் அதிகாரி பெர்ணான்டோ லியனகே அவர்களுக்கு அதிபரினால் புனித அல்குர்ஆன் பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது.

அதிபர் மிஹ்லார் அவர்கள் பாடசாலையை பொறுப்பேற்ற பின்னர் பாடசாலைச் சுற்றாடலையும் கற்றல் சூழலையும் மாற்றியமைத்தார். அதன் விளைவாக அடைவு மட்டங்கள், இணைப்பாடவிதான செயல்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பாடசாலை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

 

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் , கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *