உள்நாடு

கல்-எலிய அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வக்பு சபை கோரிக்கை..!

கல்-எலிய அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வக்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வக்பு சபையின் உத்தரவின் பிரகாரம் இது தொடர்பான பகிரங்க அறிவித்தல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸினால் கடந்த (08) வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இக்கல்லூரிக்கு நாட்டிலோ அல்ல நாட்டுக்கு வெளியிலோ காணப்படும் அசையும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி முன்னர் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்குபவர் தொடர்பான எந்தவித தகவலும் வெளிப்படுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல. 180, டீ.பி.ஜாயா மாவத்தை, கொழும்பு – 10 மற்றும் [email protected] ஆகிய முகவரிகளின் ஊடாக இந்த அரபுக் கல்லூரி தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

இலங்கை முஸ்லிம் மாணவிகளுக்கு கட்டாயக் கல்வியுடன் சேர்த்து அரபு மொழி மற்றும் சமயக் கல்வியினை கற்பிப்பதற்காக இந்த அரபுக் கல்லூரி 1959ஆம் ஆண்டு நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *