களுத்துறை நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்த விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன்
விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன் களுத்துறை மாவட்டத்திலுள்ள நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நியூ செட்ல் தோட்டத்தில் 150 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சில அடிப்படை தேவைகளை கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் வாழந்து வரும் அம் மக்களை சந்தித்து; அவர்களின் குறைகள், பிரச்சனைகளை கேட்டு அவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு அண்மையில் களுத்துறை மாவட்ட நியூசெட்ல் தோட்டத்திலுள்ள அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது .
புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனரும், களுத்துறை மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளருமான மாதவன் தனலக்ஷ்மியின் ஏற்டபாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மக்கள் தங்களுக்குள்ள பிரச்னைகளை முன்வைத்தனர்.
அதில், தங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி தருமாறும், தங்கள் பிள்ளைகள் கல்விக்காக உதவுமாறும், உடைத்த நிலையில் காணப்படும் இடவசதியின்றிய வீடுகளை சீர் செய்வதற்கு உதவுமாறும் கேட்டு கொண்டார்கள்.
தேவைகளை கேட்டறிந்த சசிகலா நரேன் அங்கு உரையாற்றிய போது,
புதிய வானம் அமைப்பின் தலைவி தனலக்ஷ்மி மாதவனின் அழைப்பில் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியடையும் அதேநேரம் எங்கள் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி நரேந்திரா இலங்கை வந்திருந்த போது, உங்கள் பிரச்சனைகளை அறிந்து கொண்டுள்ளார் .
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்த போது அவர் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதாவது, கூடுதலான கவனத்தை களுத்துறை மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கான சுய தொழில் ஒன்றை செய்வதற்கான வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளுக்கிணங்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
உங்களது குறைகளை நீங்கள் முன் வைத்துள்ளீர்கள் . அவைகளை எங்கள் அமைப்பின் ஊடாக செய்து தருவதாக உள்ளோம். என்ற வாக்குறுதியையும் வழங்குகிறேன் – என்றார்.
இந்நிகழ்வில் லண்டன் பெண்கள் அமைப்பின் தலைவி ரஜனி உதயசேகரன், இலங்கை தொழிலார் காங்கிரசின் உப தலைவர் திருகேஸ் செல்லசாமி, கிரீன் சேனல் அமைப்பின் சுப்ரமணியம், கரு பத்மநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
(சமீஹா சபீர்)