அல் பத்ரியா சாம்பியன்
அல் முபாரக் கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட பத்ரியா சம்பியன். மல்வானை அல் முபாரக் கல்லூரி ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஆரம்பமான இத் தொடரில் இப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டுப் பாடசாலைகள் பங்கேற்றிருந்தன.
நேற்றைய தினம் ஆரம்பமான லீக் போட்டிகளில்
அல் முஸ்தபா 4-0
அல் அஷ்ரப் 4-0
என்ற ரீதியில் வீழ்த்தி திகாரிய அல் அஸ்ஹர் அணியுடன் ஒன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து
A பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இன்றைய தினம் நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் B பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற உடுகொடை அரபா வித்யாலத்தை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற ரீதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
மறுமுனையில் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மல்வானை அல் முபாரக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற திகாரிய அல் அஸ்ஹர் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இறுதி நேரம் வரை இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பெற்றுக் கொள்ள தவறியதால் பெனல்டி ஷூட் மூலம் 3-0 என்ற ரீதியில் அல் பத்ரியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தத் தொடர் முழுவதுமாக அல் பத்ரியா அணிக்கு எதிராக( பெனால்டி உட்பட ) இரண்டு கோல்கள் மாத்திரமே பெறப்பட்டுள்ள நிலையில் அல் பத்ரியாவுக்கு சார்பாக 10+(3p) கோள்கள் பெறப்பட்டுள்ளது.