உள்நாடு

மல்வானை, உளகிட்டிவள அல்- மஹ்மூத் மகா வித்தியாலய மாணவர்களுக்கான ஜேர்ஸி அறிமுக நிகழ்வு

களனி வலய பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி
“முபாறக்கியன்ஸ் சம்பியன் ட்ரொபி” இல் விளையாடும் மல்வானை,
உளகிட்டிவள அல்- மஹ்மூத் மகா வித்தியாலய மாணவர்களுக்கான ஜேர்ஸி அறிமுக நிகழ்வு  (10) பாடசாலையில் அதிபர் எம்.எம்.எம்.றிம்ஸான் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில், பாடசாலை விளையாட்டுப்பிரிவு பொறுப்பாசிரியர், பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இச்சீருடையினை பாடசாலை மாணவர்களுக்காக தயார்செய்து கொடுத்த மல்வானை மல்டி பெப்ரிக் உரிமையாளர் அல் – ஹாஜ் அனீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எமது பாடசாலை கால்பந்தாட்ட அணியினருக்கான ஜேர்ஸி குறைபாடு நீண்டகாலமாக இருந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்து தந்த மல்வானை மல்டி பெப்ரிக் உரிமையாளர் அல் – ஹாஜ் அனீஸ் அவர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *