உள்நாடு

பேருவளை வருகிறார் இளம் சாதனை நீச்சல் வீரன் ஸலாமா – வரவேற்பு ஏற்பாடுகள் மும்முரம்

பேருவளை : பீ.எம் முக்தார்

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த 15 வயது சிறுவன் ஹஸன் ஸலாமா ,எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி பேருவளை நகருக்கு வருகை தரவுள்ளார்.

நாடளாவிய ரீதியில் பிரபலமடைந்து ,நாட்டை சுற்றி நடைப்பவனியில் ஈடுபட்டு வரும் சஹ்மி சஹீதுடன் கடந்த 03 ஆம் திகதி சந்தித்து, நீச்சல் அனுபவம் பற்றிய விடயங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸலாமாவின், பேருவளை வருகையின் போது ,பேருவளை மஸ்ஸல வீதியில் அமைந்துள்ள சிமி ஹோல்டிங் காட்சியகத்திற்கு அருகில்,அதன் உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லாம் யூசுஃப் தலைமையிலான வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ,இவர் பேருவளையின் சரித்திரப் புகழ் பெற்ற ஸ்தலங்களை பார்வையிடச் செல்லவுள்ளதோடு,பேருவளையின் பெருமளவிலான சிறு இளைஞர்கள் இவரின் வருகையை ஆவலாக எதிர்பார்த்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *