கே/மாவ/ திப்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் டெங்கு நுளம்பை ஒழித்து சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைப்பெற்ற நடைப்பவணி..!
டெங்கு நுளம்பை ஒழித்து சூழலை பாதுகாக்கும் நோக்கில் கே/மாவ/ திப்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்”ஆரோக்கியமான சூழல் வளமான வாழ்வுக்கான முயற்சியில் கைகோர்த்திடுவோம்”எனும் தொனிப் பொருளில் நடைப்பவணியொன்று நடைப்பெற்றது .
பாடசாலை அதிபர் எம். எஸ்.எம். அப்துல்லாஹ் (நளீமி)அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நடைப்பவணியில் உப அதிபர் எம். எம். எம். பைஸர் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் செய்யது உசைன்,வில்பொல ஜும்ஆ பள்ளி வாசல் தலைவர் பார்ஹான் உமர்,அல் அரபா ஆரம்ப பாடசாலை அதிபர் ஷிரீன் பர்ஹானா,மற்றும் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)