முஸ்லிம் காங்கிரஸ் சஜித்துக்கு முன் வைத்த கோரிக்கைகளுள் புத்தளம் தொகுதி மக்கள் பிரச்சினைகளும் உள்ளடக்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாயின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்திருந்தது.
அதில் சில விடயங்கள் புத்தளம் மக்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம் நியாஸ் தெரிவித்துள்ளார்
அவைகளாவன:
- வடமேல் மாகாண சபையில் தனியான தமிழ் கல்விப் பிரிவு
- புத்தளம் தொகுதிக்கான கல்வி வலயம்
- கற்பிட்டி பிரதேச சபையை இரண்டு சபைகளாக அமைதல்
- புத்தளம் வைத்திய சாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருதல்
- கற்பிட்டி மீன்பிடி துறைமுகத்தை கப்பல் துறைமுகமாக தரம் உயர்த்தி அபிவிருத்தி செய்தல்
- நுரைச்சோலை மத்திய மரக்கறி சந்தை தொகுதியில் கூல் ரூம் அமைத்தல் மற்றும் மத்திய கேந்திர நிலையமாக தரம் உயர்த்தல்
- மதுரங்குளி தும்பு உற்பத்தி தேங்காய் ஏற்றுமதி கேந்திர நிலையமாக அரசின் வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடல்
- புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணல்
- புத்தளம் மரிச்சிக்கட்டி மன்னார் பாதை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்
என்ற கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)