திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பித்து சென்ற இலங்கை தமிழர் கைது..!
திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்புமுகாமில் தங்க வைக்கபட்டிருந்த இலங்கை நாட்டை சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் (எ) அப்துல் ரியாஸ் த.பெ அப்துல் ரசாக் என்பவர் கடந்த 22.07.24-ந்தேதி காலை அவரது அறையில் ஆய்வு செய்தபோது அவர் அங்கு இல்லை எனவும் அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது அறையில் இருந்த சிறிய ஜன்னல் வழியாக ஜன்னலின் கம்பிகளை உடைத்து தப்பித்து சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் கே.கே.நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், சிறப்புமுகாமிலிருந்து தப்பித்து சென்ற முகாம்வாசியை கைது செய்ய தனிப்படை அமைக்கபட்டது.
மேற்படி தப்பித்து சென்ற அப்துல் ரியாஸ் கானை தேடி வந்த நிலையில், (02.8.2024)-ந்தேதி இரவு அப்துல் ரியாஸ் கான் தனது குடும்பாத்தரை கான ராமேஸ்வரம் செல்ல திருச்சி ரயில் நிலையம் அருகே ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விரைந்து சென்று அங்கு இருந்த அப்துல் ரியாஸ் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது. பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)