கௌரவமான பங்களிப்பு எனும் கருப்பொருளில் ஊடகவியலாளர்களை ஒன்றிணைந்த ஜனாதிபதி
நாட்டின் மூன்றாவது தூணாக சேவை செய்து வரும் ஊடகவியலாளர்களின் துறைசார் பிரச்சினைகளை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நோக்குடன் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதயமான கௌரவமான பங்களிப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (06) கொழும்பு ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலக ஊடகவியலாளர்கள் மற்றும் நாட்டில் உள்ள பிரதேச ஊடகவியலாளர் என சகலரையும் ஒன்றிணைத்து பத்தரமுல்ல வோட்டர் ஏட்ஜ் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை பற்றியும் தேவைப்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஆகியோர் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)