உள்நாடு

ஷேக் ஹசீனா, நம் நாட்டிற்கு 200 மில்லியன் டாலர்கள் வழங்கியதை மறக்கக் கூடாது..! – ஜனாதிபதி

“ஷேக் ஹசீனா ஒரு படி முன்னதாகவே நடவடிக்கைகளை எடுத்து இருந்தால், இன்று பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (06) முற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமான “2024 சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை” (ESG) மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,,
“நமது நட்பு நாடான பங்களாதேஷின் அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதைப் பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு வெளியேறினாலும், நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது, அவர் நம் நாட்டிற்கு 200 மில்லியன் டாலர்களை வழங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, இந்த நேரத்தில் உண்மையில் ஒரு நபரைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை கூறுவது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.
இதேவேளை, காலிதா ஸியா, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஷேக் ஹசீனா இதை முன்பே செய்திருந்தால், அவரால் இன்னும் வங்காளதேசத்தின் பிரதம மந்திரியாக இருந்து இருக்கலாம். உலகின் நிலைமைகள் சரியில்லை என்பதை, இத்தகைய இவ்வாறான நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *