உலகம்

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம்..!  – மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்..!

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஹசீனா இந்தியா வந்தார். ஹசீனா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தோம் என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் கூறியதாவது; வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியே மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக நட்பு நாடாக உள்ளன. வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஹசீனா இந்தியா வந்தார். ஹசீனா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தோம். பதவி விலகிய பின்னர் இந்தியா வருவதற்கு ஷேக் ஹசீனா அனுமதி கோரினார்.வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர். வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களில் 9,000 பேர் மாணவர்கள் என்று அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய அரசு அமைதிக்கான தீர்வை முன்வைத்தது. வங்கதேச உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் போராட்டம் ஓயவில்லை.

நிலைமை மோசமடைந்ததால் ஹசீனாவின் விமானம் இந்தியாவுக்குள் வர அனுமதியளித்தோம். வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பிவிட்டனர். வங்கதேச ராணுவத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டனர். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *