ரணில் பெரமுனவை பிளவுபடுத்தவில்லை – பிரசன்ன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கு, ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதுடன், கட்சியாக இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எப்போதும் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (05) திங்கட்கிழமை இரவு பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க , காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )