காஷ்மீர் தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு..!
இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019 ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை நினைவூட்டும் வகையில் காஷ்மீர் தினம் கொழும்பு 7ல் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் (05.08.2024) உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீம் உல் அஸீஸ் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அங்கு உரையாற்றும்போது காஷ்மீரிகளின் அவல நிலையைப் சுட்டிக்காட்டியதோடு இந்த சர்ச்சையானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பழமையான விஷயங்களில் ஒன்று என தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்தியா தனது உறுதிமொழிகளை மதிக்க மறுப்பதாலும், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காததாலும் இந்த சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகை, தகவல் தொடர்பு முற்றுகை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், போலி என்கவுன்டர்கள் மூலம் அப்பாவி காஷ்மீரிகள் மீதான அடக்குமுறை மற்றும் தாக்குதலை நிறுத்துமாறும் இ்வ் விடயத்தில் ஜ.நா. தலையிட்டும் இதுவரை கவனத்திற்கெடுக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் எனவும் உயர்ஸ்தாணிகர் உரையாற்றினர் அத்துடன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் முகமது ஷேபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகியோரின் காஷ்மீர் நினைவு தினம் குறித்து வெளியீட்ட செய்திகளும் அங்கு வாசிக்கப்பட்டன.